ட்ரம்ப் அரசாங்கத்துடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில் இலங்கை
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையாக இச் சந்திப்பு அமைந்திருந்ததென, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தொடர்பான விடயங்கள் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கையை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் இலங்கை ஜனாதிபதி பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.