இலங்கை 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி
வெலிசறை கடற்படை முகாமில் 28 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சற்று முன்னர் உறுதியாகியுள்ள நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.
பொலன்னறுவை – புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் கொரோனா தொற்றாளராக பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இதனையடுத்து இன்று காலை, வெலிசறை முகாமில் குறித்த வீரர் தங்கியிருந்த முகாமில் இருந்த அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் போது அங்கு தங்கியிருந்த 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.