Tuesday , October 14 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / கென்யாவில் பேருந்து மீது லாரி மோதல்; 30 பேர் பலி

கென்யாவில் பேருந்து மீது லாரி மோதல்; 30 பேர் பலி

கென்யா நாட்டில் பேருந்து மீது லாரி மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் 30 பேர் இன்று உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்

கென்யா நாட்டில் பசியா பகுதியில் இருந்து பேருந்து ஒன்று பயணிகளுடன் நகுரு-எல்டோரெட் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் நகுரு பகுதியில் இருந்து வந்த லாரி ஒன்றின் மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் இரு வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் 3 வயது குழந்தை உள்பட 30 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக நகுரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

கென்யாவில் சாலை விபத்துகளில் ஒவ்வொரு வருடமும் 3 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என அதிகாரபூர்வ புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …