Thursday , November 21 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீ்ரமானத்திற்கு ஜே.வி.பி. ஆதரவு

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீ்ரமானத்திற்கு ஜே.வி.பி. ஆதரவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டால் அதற்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக தெரிவித்தார்.

பிரதமரின் ஆட்சியின் குறைப்பாடுகளையும், அவர் ஊழல் வாதிகளுக்கு பாதுகாப்பளித்துள்ளார் என்ற நியாயபூர்வத்தின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் மாறாக அரசியல் அபிலாஷைகளை இலக்காக கொள்ளும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிக்க மாட்டோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க ஜே.வி.பி. தயாராகவுள்ளது. பிரதமர் மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் – மோசடிகள், திருடர்களை பாதுகாத்தமை, மத்திய வங்கி பிணைமுறி மோசயுடன் தொடர்புப்பட்டுள்ளமை, ராஜபக்ஷர்களில் ஊழல்களுக்கு தண்டனை வழங்குவதில் இருந்து பாதுகாத்தமை உட்பட அவரின் ஆட்சியின் வினைதிறன்மைகளை காரணங்காட்டி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவந்தால் அதற்கு ஆதரவளிப்போம்.

மாறாக அவர் அவரின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாரில்லை. ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதிவியில் இருப்பதும் இல்லாதிருப்பதும் எங்களுக்கு தேவையற்ற விடயமாகும் என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …