Tuesday , December 24 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் மக்கள் அபகரிக்கின்றனர்: சுமணரத்ன தேரர்

தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் மக்கள் அபகரிக்கின்றனர்: சுமணரத்ன தேரர்

தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம் அமைப்புக்கள் அத்துமீறி கைப்பற்றுவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தமிழ் இன விழிப்புணர்வுக்கான அமைப்பு தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மங்களராமய விகாரையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் அத்துமீறி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அப்பகுதியில் உறுதியுடைய காணிகளை முஸ்லிம் அமைப்பு ஒன்று அத்துமீறி புகுந்து அந்த மக்களுக்கு அநீதிகளை இழைத்துவருகின்றது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அப்பாவித் தமிழ் மக்களுடைய காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது என்றும் இது குறித்து பிரதேச செயலாளர் வாழைச்சேனை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் இதன் போது கேட்டுக்கொண்டார்.

மேலும், முஸ்லிம் அமைப்புக்கள் பொத்துவில் இருந்து மூதூர் வரைக்குமான கரையோரப் பிரதேசம் ஒரே நகரம் என்ற அளவிற்கு உருவாகியுள்ளது எனவும் அமைச்சர் ஹஸ்புல்லா தமிழ் சிங்கள, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விகற்பதற்கு என ஆசியாவிலே பெரிய பள்ளிவாசல் ஒன்றை கட்டுவதாகவும் தமிழ் சிங்கள மாணவர்கள் முஸ்லிம் பள்ளியில் சென்று படிக்க வேண்டுமா? என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கேள்வி எழுப்பினார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …