கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விசித்திரமான முறையில் வுஹான்ல் கை குலுக்கல்..!
சீனாவில் கொரோனா வைரஸ் பரவாத வகையில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிக்க “வுஹான் குலுக்கல்” என்ற புதிய வழியை அந்நாட்டு மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கைக்குலுக்கல், கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது உள்ளிட்ட நேரடி தொடர்பை மக்கள் தவிர்க்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது.
இதை நடைமுறைப்படுத்தும் விதமாக இளைஞர்கள் சிலர், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகளுக்கு பதில் கால்களால் வாழ்த்து தெரிவித்துக் கொள்ளும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பிறப்பிடமாக கருதப்படும் ஊகான் நகரின் பெயரைச் சேர்த்து இந்த புதிய வாழ்த்து முறைக்கு வுஹான் குலுக்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.