10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட் – பெல்ஜியம் விழாவில் மக்கள் கொண்டாட்டம்

பெல்ஜியம் ஆண்டு விழாவில் மக்கள் 10000 முட்டைகளை கொண்டு ராட்சத ஆம்லேட் செய்து பகிர்ந்து உண்டது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் ஆண்டு விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் மக்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டாடுவர்.

இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராமத்தில் உள்ள மக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ராட்சத அளவில் ஆம்லெட் செய்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க முடிவு செய்தனர்.

இதை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள் மற்றும் மக்களில் சிலர் இணைந்து அதற்கு உதவி புரிந்தனர். அவர்கள் மிகப்பெரிய பாத்திரத்தில் 10000 முட்டையை உடைத்து ஊற்றினர். அதில் வெங்காயம் மற்றும் இறைச்சியை கலந்து ஆம்லெட் செய்து, அந்த ராட்சத ஆம்லெட்டை விழாவில் பங்கு பெற்ற அனைத்து மக்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

ராட்சத ஆம்லெட்டை அனைவரும் சேர்ந்து செய்யும் வீடியோ இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *