தெற்கு அந்தமான் தீவுகளில், இலங்கையிலிருந்து 900 கிலோ மீற்றர் தொலைவில் குறைந்த தாழமுக்கம் நேற்று மாலை நிலைகொண்டிருந்தது. இந்தக் குறைந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் காற்றின் வேகம் நேற்றைய தினத்தை விட அதிகமாக இருக்கும்.
இவ்வாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பிமேரலால் தெரிவித்தார்.
தெற்கு அந்தமான் தீவுகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
நேற்றுமுன்தினம் மாலை இலங்கையிலிருந்து ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. நேற்று மாலை அது 900 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இது வங்கக் கடல் ஊடாக இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை நாளை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இன்றைய தினம் வங்கக் கடலில் காற்றின் வேகம் நேற்றைய தினத்தை விட அதிகமாக இருக்கும். கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் -என்றார்.