ஜெனிவாவில் இலங்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ரொட்டுக்கு அளித்தது அமெரிக்கா!
இலங்கை விவகாரம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் அதிகாரம், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான முதன்மைப் பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெனிவாவில் இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான முழு அதிகாரத்தையும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான முதன்மைப் பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட்டுக்கு அளித்துள்ளார்.
வில்லியம் ரொட்டை, இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் வொஷிங்டனில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அதற்குப் பின்னர், அவர் வெளிவிவகார அமைச்சுக்கு இரகசிய குறிப்பு ஒன்றை அனுப்பினார்.
எந்தவொரு முக்கியமான கொள்கை மாற்றம் தொடர்பாகவும், ட்ரம்ப் நிர்வாகம் முடிவுகளை எடுப்பதற்கு இன்னமும் காலம் தேவை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.