Sunday , December 22 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் கிடைக்குமா? அற்புதம்மாள் மனு

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் கிடைக்குமா? அற்புதம்மாள் மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் பரோல் கிடைத்தது. ஒரு மாதம் கிடைத்த பரோல் கடந்த மாதமே முடிவடைந்தாலும் பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.

நீட்டிக்கப்பட்ட பரோல் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க முதல்வரிடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனு கொடுத்துள்ளார்
பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு இன்னும் சிகிச்சை முடிவடையவில்லை என்றும், சிகிச்சையின் பாதியில் விட்டுச்செல்ல பேரறிவாளன் விரும்பாததால் இன்னும் ஒரு முறை பரோலை நீட்டிக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் பேரறிவாளன் மிக நீண்ட காலமாக சிறையில் இருந்துள்ளதால் அவரை விடுதலை செய்யும் கொள்கை முடிவுடன் இருக்கும் தமிழக அரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv