Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கூட்டு அரசு தொட­ருமா?

கூட்டு அரசு தொட­ருமா?

கூட்டு அரசை நிறு­வும் நோக்­கு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடை­யில் கைச்­சாத்­தி­டப்­பட்ட புரிந்­து­ ணர்வு ஒப்­பந்­தம் நீடிக்­கப்­ப­டுமா? இல்­லையா? என்­பது தொடர்­பில் கூட்டு எதிர்க்­கட்­சி­யும் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் ஆளும் கட்­சி­யி­டம் கேள்வி எழுப்­பி­ய­மை­யி­னால் நேற்­றுச் சபை­யில் கடு­மை­யான வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுப் புதன்­கி­ழமை, மகிந்த அணி நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் தினேஷ் குண­வர்­தன கேள்வி எழுப்­பி­யதை அடுத்தே சபை­யில் சர்ச்­சை­யான நிலமை ஏற்­பட்­டது.

‘நாட்­டின் அர­ச­மைப்­புத் தொடர்­பான முக்­கி­ய­மான விட­ய­ மொன்றை சபைக்கு முன்­வைக்க விரும்­பு­கின்­றேன். 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின் பின்­னர் இரு பிர­தான கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்து கூட்டு அரசை நிறு­வப் போவ­தாக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யோச­னை­யொன்றை முன்­வைத்­தார்.

இதன்­போது அமைச்­சர்­கள், இரா­ஜாங்க மற்­றும் பிரதி அமைச்­சர்­கள் எண்­ணிக்­கை­யும் நிர்­ண­யம் செய்­யப்­பட்­டுள்­ளது.
கூட்டு அர­சில் அங்­கம் வகிக்க முடி­யு­மான அமைச்­சர்­கள், இரா­ஜாங்க மற்­றும் பிரதி அமைச்­சர்­க­ளின் எண்­ணிக்கை நிர்­ண­யம் செய்­யப்­பட்­டுள்­ளது என்­ப­தனை அரசு ஏற்­றுக்­கொள்­ளுமா? தற்­போது இந்த விதி­முறை மீறப்­பட்­டுள்­ளது என்­ப­தனை ஏற்­பீர்­களா?

ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் டிசெம்­பர் மாதம் 31 ஆம் திகதி நிறைவு பெற்­றுள்­ளமை அரசு ஏற்­குமா? சிரானி விஜே­விக்­கி­ரம மற்­றும் பிய­சேன கமகே ஆகி­யோ­ருக்கு இரா­ஜாங்க அமைச்சு பத­வி­கள் வழங்­கப்­பட்­டுள்­ள­மை­யி­னால் அர­ச­மைப்­பின் 46 ஆவது சரத்து மீறப்­பட்­டுள்­ளது. இதனை ஏற்­பீர்­களா’ என்று தினேஷ் குண­வர்­தன கேள்வி எழுப்­பி­னார்.

‘சிரானி விஜே­விக்­கி­ரம இரா­ஜாங்க அமைச்­சினை பெற்­றுக்­கொண்­ட­மையா உங்­க­ளது பிரச்­சினை. சிரானி விஜே­விக்­கி­ரம மீண்­டும் உங்­க­ளுக்கு தேவையா?’ என்று சபை முதல்­வர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல கிண்­ட­லா­கக் கேட்­டார்.
‘சிரானி எனக்­குத் தேவை­யில்லை. ஐக்­கிய தேசி­யக் கட்சி சிரா­னியை வைத்­துக் கொள்­ளட்­டும். தற்­போது கூட்டு அர­சின் இரு பிர­தான கட்­சி­க­ளின் ஒப்­பந்­தம் நிறை­வு­பெற்­றுள் ளது.

அர­ச­மைப்­புக்கு முர­ணாக அமைச்­ச­ரவை இயங்கி வரு­கின்­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விட­யத்­தில் பதில் வழங்க வேண்­டும்’ என்று தினேஷ்குண­வர்­தன குறிப்­பிட்­டார்.

இத­னை­ய­டுத்து பேசிய அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல, ரணில் விக்­கி­ர­ம­சிங்க விரை­வில் பதில் வழங்­கு­வார். எனி­னும் கூட்டு அரசு தொடர் பாக எதி­ரணி கவலை கொள்­ளத் தேவை­யில்லை. இது ஆளும் கட்சி பிரச்­சினை என்று குறிப்­பிட்­டார்.

மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சி­யின் பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திசா­நா­யக்க, கூட்டு அரசு இரண்டு ஆண்­டு­க­ளுக்கே என்று கூறப்­பட் டது. பிர­தான கட்­சி­க­ளுக்கு இடை­யில் கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தம் செப்­ரெம்­பர் மாதமே நிறைவு பெற்று விட்­டது. புதிய ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளதா? என்­று­கேட்­ட­போது, இடை­யில் குறுக்­கிட்டு பேசிய அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல, இது கூட்டு அர­சின் பிரச்­சி­னை­யா­கும். எதி­ரணி தலை­யிட வேண்­டி­ய­தில்லை, என்­றார்.

‘இது கூட்டு அர­சின் பிரச்­சினை மாத்­தி­ர­மல்ல. நாட்டு மக்­க­ளின் பிரச்­சி­னை­யா­கும். இரு பிர­தான கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான ஒப்­பந்­தம் நீடிக்­கப்­ப­டுமா? இல்­லையா? புதிய ஒப்­பந்­தங்­கள் ஏதும் கைச்­சாத்­திட்­டி­ருந்­தால் சபா­நா­ய­க­ருக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும். அப்­ப­டி­யா­யின் சபா­நா­ய­கரே உங்­க­ளுக்கு புதிய ஒப்­பந்­தங்­கள் ஏதும் கிடைத்­துள்­ளதா? என்­றார் அநு­ர­கு­மார.
தனக்­குப் புதிய ஒப்­பந்த தொடர்­பான எந்­த­வொரு நக­லும் அதற்­கான தக­வல்­க­ளும் கிடைக்­க­வில்லை என்று சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய கூறி­னார்.

இதன்­போது உதய கம்­மன்­பில, கூட்டு அர­சின் ஒப்­பந்­தம் நிறைவு பெற்­றுள்ள நிலை­யில் அர­சில் அங்­கம் வகிக்­கும் அமைச்­சர்­க­ளின் சொகுசு வாழ்க்­கைக்கு நிதி ஒதுக்­கீடு செய்ய முடி­யுமா? என்­றார்.
சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய குறுக்­கிட்டு இந்­தக் கேள்­விக்­கான பதிலை ரணில் வழங்­கு­வார் என்று கூறி வாக்­கு­வா­தத்தை நிறை­வுக்கு கொண்டு வந்­தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv