கடந்த சில மாதங்களாக ரஜினியும் கமலும் அரசியலுகு வரவுள்ளதாக கூறிக்கொண்டிருந்த நிலையில் இருவரையும் முதன்முதலில் ஆதரித்த முதல் அரசியல் தலைவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் திருமாவள்வன் தான்;
ஆனால் கடந்த 31ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை உறுதி செய்தவுடன் திடீரென அவரை எதிர்க்கும் முதல் தலைவராகவும் அவர் உள்ளார்.
முரண்பாட்டின் மொத்த உருவமாக திருமாவளவன் இவ்வாறு நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் ஒரு காரணத்தை கூறியுள்ளனர்
அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளும் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த நிலையில் புதியதாக வரும் கமல் அல்லது ரஜினியுடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்ததாகவும் ஆனால் ரஜினிகாந்த் 234 தொகுதிகளிலும் தான் வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்துள்ளதால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன் தற்போது ரஜினியை எதிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.