பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகை ஓவியா பெற்ற புகழ் அவரே எதிர்பார்க்காத ஒன்று.
இதனை இப்போது அவர் சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார். தற்போது ஓவியாவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன.
அதே போல விளம்பர பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அதன்படி அவர் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த அவர் இன்று அதன் கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்தார்.
அப்போது ரசிகர்கள் சார்பில் தொகுப்பாளர் பிரியங்கா பல்வேறு கேள்விகள் கேட்டார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் ஆரவை சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாரதவிதமாக எனக்கு பிடித்த போட்டியாளர் அனுயா என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
https://www.youtube.com/watch?v=yrU5ksZU7TA