Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வயாவி­ளான் பகு­தி­யில் வெடி­பொ­ருள்­கள் தொடர்­பில் எச்­ச­ரிக்கைப் பதா­கை­கள்

வயாவி­ளான் பகு­தி­யில் வெடி­பொ­ருள்­கள் தொடர்­பில் எச்­ச­ரிக்கைப் பதா­கை­கள்

இரா­ணு­வத்­தால் அண்­மை­யில் விடு­விக்­கப் பட்ட பகு­தி­யான வலி­. வ­டக்கு வய­ாவி­ளான் பகு­திக்­குச் செல்­லும் மக்­கள் வெடி­பொ­ருள்­க­ளில் இருந்து பாது­காப்­புப் பெறு­வ­தற்கு அங்கு ஆங்­காங்கே எச்­ச­ரிக்கைப் பதா­கை­கள் தொங்க விடப்­பட்­டுள்­ளன.

இலங்கை இரா­ணு­வத்­தின் கட்­டுப்­பாட்­டில் 27 வரு­டங்­க­ளாக இருந்த வயாவி­ளான் பகுதி கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் மக்­க­ளி­டம் மீண்­டும் கைய­ளிக்­கப்­பட்­டது. அங்கு ‘மிதி­வெடி, வெடி­பொ­ருள்­க­ளில் இருந்து எமது மக்­க­ளைப் பாது­காப்­போம்’ என்ற தொனிப்­பொ­ரு­ளில் எச்­ச­ரிக்­கைப் பதா­கை­கள் பல தொங்க விடப்­பட்­டுள்­ளன.

அத்­து­டன் குறித்த பகு­தி­க­ளில் வெடி­பொ­ருள்­களை கண்­டால் கீழ்க் கண்ட தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு அழைப்பை மேற்­கொள்­ளு­மா­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. சொன்ட் நிறு­வ­னத்­துக்கு 021-2226700 என்ற இலக்­கத்­துக்­கும், கலோ ட்ரஸ்ட் நிறு­வ­னத்­துக்கு 021-2223779 என்ற இலக்­கத்­துக்­கும், பிராந்­திய மிதி­வெடி செயற்­பாட்டு அலு­வ­ல­க 021-2285415 என்ற இலக்­கத்­துக்­கும் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­த­லாம்.

இரா­ணு­வத்­தி­னர் வசம் இருந்து விடுவிக்­கப்­ப­டும் இடங்­க­ளில் இருந்து கடந்த காலங்­க­ளில் இருந்து இன்­று­வரை பெரு­ம­ள­வான வெடி பொருள்­கள் மீட்­கப்­பட்டுவரும் நிலை­யில் பொது­மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஊட்­டும் வகை­யில் இவ்­வா­றான பதா­கை­கள் தொங்க விடப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …