சர்வதேச நீதிபதிகளை நீக்கினால் உறுப்பு நாடுகள் பிளவுபடும் : ராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பு
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், இலங்கை மீதான விசாரணை பொறிமுறையிலிருந்து சர்வதேச நீதிபதிகள் நீக்கப்படின் அது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடையே பிளவை ஏற்படும் என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள், சர்வதேச மற்றம் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் நீதிபதிகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதனை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஐ.நா.வின் குறித்த தீர்மானம் மீதான அழுத்தங்களை குறைக்க உறுப்பு நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் குறித்த முயற்சி வெற்றிபெற்று, விசாரணைப் பொறிமுறையிலிருந்து சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கான பரிந்துரை நீக்கப்படின் ஐ.நா. பேரவையின் உறுப்பு நாடுகள் பிளவுபடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




