Sunday , November 17 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி வலியுறுத்தல்

சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி வலியுறுத்தல்

சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி வலியுறுத்தல்

சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கு கோரும் நடைமுறையை ரகசியமாக நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி நேரில் வலியுறுத்தியுள்ளது.

சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் நேரில் வலியுறுத்தினர். முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து 9-வது நாளாக கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். சசிகலா, தினகரன், வெங்கடேஷ் உள்ளிட்டோரை ஓபிஎஸ் அணி அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் உள்ளிட்டோர் திடீரென இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பின் போது தங்களது அணி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு தரப்பட வேண்டும்; நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறையை ரகசியமாக நடத்த வேண்டும் எனவும் ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தினர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …