Tuesday , May 21 2024
Home / tamil news / நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல ஹிட்லர் மாடல் ஆச்சி நடந்து கொண்டிருக்கிறது. டிடிவி தினகரன் விமர்சனம்.

நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல ஹிட்லர் மாடல் ஆச்சி நடந்து கொண்டிருக்கிறது. டிடிவி தினகரன் விமர்சனம்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்;

திமுக சட்டமன்ற பொது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பல்வேறு ஏமாற்ற திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்தாரோ அதேபோல் பாராளுமன்றத் தேர்தல் வரும் சமயத்தில் உறுதியாக செய்ய முடியாத திட்டங்களாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் ஜோக்கராக செயல்பட்டால் அவர்களை ஜோக்கராகத்தான் எல்லோரும் பாவிப்பார்கள். நடிகை என்பதற்காக ஒரு பெண்மணி அவமானப்படுத்துவது, பேசுவது அக்கா தங்கையுடன் பிறந்தவர்கள் செய்யக்கூடிய செயல் அல்ல.

தொழில் வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே சமயத்தில் விவசாய நிலங்களை அழித்து அங்கு தொழில் வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டுமா என்பது கேள்விக்குறியா உள்ளது.திமுகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் விரும்பாத பகுதிகளில் விவசாயிகள் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களை மாற்ற மாட்டோம் என தேர்தல் வாக்குறுதியாக சொல்லி இருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை மீறியதால் தான் விவசாயிகள் போராடுகிறார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து பிஜேபி இடம் தான் கேட்க வேண்டும். ஹிட்லர் ஆட்சியில் நடப்பது போல் காவல்துறை வைத்து மாற்றுத்திறனாளிகளை அடக்க பார்க்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி அல்ல, ஹிட்லர் ஆட்சி போல் இருக்கிறது. எதிர்க்கட்சியா இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடும் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு ஹிட்லர் போல் அரக்கர் போல் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். திமுக ஒருபோதும் திருந்தாது என்பது நிரூபிக்கிறார்கள் என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv