Sunday , December 22 2024
Home / சினிமா செய்திகள் / விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் அபார வசூலை பெற்று வரும் இந்த படம் விஷாலின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்துள்ளது.

இந்த நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் அடுத்த படத்திற்கு ‘அயோக்யா’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவுள்ளார்.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விஷால் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார்

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv