Friday , August 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / காணாமல்போன குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

காணாமல்போன குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

காணாமல்போன குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

காணாமல்போயுள்ளதாகத் தேடப்பட்டு வந்த குடும்பஸ்தர் இன்று காலை கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் என வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா நெடுங்கேணி பழைய மாமடுப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயபாலன் தர்மசீலன் (வயது 34) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதல் குறித்த நபரைக் காணவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர். நேற்று வெள்ளிக்கிழமையும் அவர் வீடு திரும்பாததை அடுத்து அனைத்து இடங்களிலும் உறவினர்கள் தேடியுள்ளனர். தகவல் கிடைக்கவில்லை.

சந்தேகத்தில் வீட்டுக் கிணற்றில் தேடியபோது அங்கு அவரது சடலம் இருப்பது தெரியவந்தது. நெடுங்கேணிப் பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது. இன்று காலை சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் வவுனியா மாவட்ட பதில் நீதவானின் உத்தரவுக்கு அமைய சடலத்தை மீட்டனர்.

உடற் கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார். சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

Tamil Technology News

 

Tamilnadu News

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …