Monday , November 18 2024
Home / ஆன்மிகம் / செல்வம் பெருகும் வரலட்சுமி விரதம்!

செல்வம் பெருகும் வரலட்சுமி விரதம்!

செல்வம் பெருகும் வரலட்சுமி விரதம்!

ஆதியும் அந்­தம் இல்லா அரும்­பெ­ரும் மத­மாக மேன்­மை­யு­றும் இந்து மதம் தனின் வழி­பாட்டு முறை­மை­க­ளில் இந்து மக்­க­ளால் தவ­றாது கடைப்­பி­டிக்­கப்­ப­டு­பவை விர­தங்­கள் ஆ­கும். விர­தம் என்­பது எம் மனதை ஒரு நிலைப்­ப­டுத்தி இறை­வன் திரு­வ­ருளை பெற்­றுக் கொள்­வ­தற்கு நாம் இயற்­றும் ஒரு வழி­பாட்டு முறை­யா­கும். இத்­தகு விர­தங்­கள் பல எம் இந்து மதத்­த­வ­ரால் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒவ்­வொரு கட­வு­ளுக்கு என்று பல விர­தங்­கள் குறிக்­க­ப்பட்­டுள்­ளன.

ஆனால் அவை அனைத்­தும் இறை­வன் திரு­வ­ருளை பெறு­தல் எனும் தத்­து­வத்­தையே உணர்த்தி நிற்­கின்­றன. இத்­தகு விர­தங்­க­ளில் உயர்­வா­ன­தும், சிறப்­புக்­கு­ரி­ய­து­ மான விர­தம் வர­லட்­சுமி விர­த­மா­கும்.
இந்த வித­ர­தம் ஆவணி மாதத்­தில் வரும் பௌர்­ண­மிக்கு முதல் வெள்­ளிக்கி ழமை கடைப் பிடிக்கப்படுகிறது.

மேலும் இந்த வி­ர­தம் செல்­வ­போ­கங்­க­ளைப் பெறு­வ­தற்­கும், புத்­தி­ர­ பாக்­கி­யம் உண்­டா­கு­வ­தற்­கும், கண­வ­னுக்கு நீண்ட ஆயுள் கிடைக்­கப்­பெ­று­வ­தற்­கும், திரு­ம­ணம் ஆன பெண்­க­ளின்­மாங்­கல்­யம் நிலைத்­தி­ருப்­ப­தற் கும்,வாழ்­வில் மகிழ்ச்சி பொங்­கு­வ­தற்­கும் என இந்த வி­ர­தம் கடைப்பி டிக்கப் ப டுகிறது.

மகா­லட்­சு­மி­யின் தோற்­றம்

ஒரு முறை அமிர்­தம் வேண்டி தேவர்­க­ளும், அசு­ரர்­க­ளும் பாற்­க­டல் கடைந்­த­னர். அப்­போது அந்த பாற்­க­ட­லில் இருந்து பல தெய்­வீ­க­மான வஸ்­துக்­கள் வெளி­வந்­தன.

அவற்­றைத் தொடர்ந்து அழ­கெல்­லாம் ஒருங்கே பெற்ற மகா­லட்­சுமி பாற்­க­ட­லில் இருந்து தோன்­றி­ய­வரே மகா­லட்­சுமி தேவி. அவ்­வாறு தோன்றி மகா­லட்­சு­மிக்குத் தேவர்­க­ளின் தலை­வன் இரத்­தி­ன­ம­ய­மான பீடம் ஒன்றை அளித்­தான். மேலும், அங்­கி­ருந்த தேவர்­கள், முனி­வர்­கள் எல்­லோ­ரும் மகா­லட்­சு­மி­யைப் போற்­றித் துதித்­த­னர். தன் திருக்­க­ரத்­தில் செல்­வம் பொழி­யும் கல­சத்­து­டன் தோன்­றி­ய­வர் திரு­ம­கள்.

அக்­க­ணமே காத்­தல் கட­வு­ளாம் விஷ்ணு­வைத் தன் கண­வான தேர்ந்­தெ­டுத்து அவ­ருக்கே மண­மாலை சூடி அந் நாரா­ய­ணன் இத­யக்­க­ம­லத்­தில் அமர்ந்து கொண்­டாள். பாற்­க­ட­லி­டைப் பிறந்­தாள் அது பயந்த நல் அமு­தத்­தின் பான்மை கொண்­டாள் ஏற்­கு­மோர் தாம­ரைப்பூ அதில் இணை மலர்த் திரு­வடி இசைந்­தி­ருப்­பாள்.

நாற்க் கரம் தானு­டை­யாள்­அந்த
நான்­கி­னும் பல வகைத் திரு­வு­டை­யாள்
வேற் கரு விழி­யு­டை­யாள் செய்ய
மேனி­யள் பசு­மையை விரும்­பு­ப­வள் என திரு­ம­க­ளாம் லட்­சு­மி­யின் பிறப்பைப் போற்­றிப் பாடு­கின்­றார் மகா­கவி பார­தி­யார்.

வர­லட்­சுமி விர­தத்­தின் கதை­யா­டல்

நில­வு­ல­கில் பத்­ர­ச­ர­வஸ் எனும் மன்­னன் மகத நாட்­டை ஆட்சி செய்து வந்­தான். அவன் மனைவி சுசந்­திரா ஆவள். தான் மகா­ராணி என்­ப­தா­லும் செல்வ மம­தை­யா­லும் மகா­லட்­சு­மியை அவ­ம­தித்து வந்­தாள். இத­னால் காலப் போக்­கில் அனைத்து செல்­வங்­க­ளை­யும் இழந்து துன்­பத்­தால் வருந்­தி­னாள். இந்த நிலை­யில் அவள் மகள் சாரு­மதி. ஆவள் தெய்வ நம்­பிக்கை கொண்­ட­வள். மகா­லட்­சு­மி­யின் கிரு­பை­யி­னால் எல்லா செல்­வங்­க­ளும் பெற்று நல் துணை­வ­னை­யும் பெற்று மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வந்­தாள். ஒரு முறை மகா­லட்­சுமி சாரு­ம­தி­யின் கன­வில் தோன்றி வர­லட்­சுமி விர­தம் கடைப்பி டிக்கும் வழி­மு­றையை எடுத்­து­ரைத்து அதை கடைபிடிக்கும் படி­யும், உன் தாயி­டம் இது பற்றிக் கூறும்படி­யும் சொல்லி மறைத்­தாள். சாரு­ம­தி­யும் தாயி­டம் சென்று வர­லட்­சுமி விர­தத்தை கடைப்பிடிக்கும் வழி­முறையைக் கூறி­னாள். அதன்­படி சுசந்­தி­ரா­வும் தன் தவறை உணர்ந்து வர­லட்­சுமி விர­தம் கடைப்­பி­டித்­தாள். இதன் கார­ண­மாக இழந்த செல்­வங்­கள் எல்­லாம் மீண்­டும் கிடைக்­கப்­பெற்­றால் என்­கின்­றது புரா­ணக் கதை­யா­டல்.

அருள் புரி­யும் அஷ்ட­லட்­சு­மி­கள்

மகா­லட்­சுமி அஷ்ட­லட்­சு­மி­க­ளாக வடி­வம் தாங்கி திரு­வ­ருள் பாலிக்­கின்­றாள். அத்­தகு அஷ்ட­லட்­சு­மி­களை பின்­வ­ரு­மாறு கண்­ணு­ற­லாம். ஆதி­லட்­சுமி, விஜ­ய­லட்­சுமி, தைரி­ய­லட்­சுமி, கஜ­லட்­சுமி, சந்­தா­ன­லட்­சுமி, வித்­யா­லட்­சுமி, தன­லட்­சுமி, தான்ய லட்­சுமி ஆகி­யோரே அவர்­க­ளா­வர். இவ் அஷ்ட­லட்­சு­மி­களை வழி­பட்­டால் நலன்­கள் யாவும் பெற்­றிட முடி­யும். இத்­தகு அஷ்­ட­லட்­சு­மி­க­ளின் அரு­ளும், கிரு­பை­யும் எம் அனை­வ­ருக்­கும் கிடைக்­கப் பெற வேண்­டும் எனில் வர­லட்­சுமி விர­தத்தை கடைபிடித்தால்போதும்.

வர­லட்­சுமி விர­தம் கடைப்பிடிக்கும் முறை
இந்த விர­தம் அதி­க­ள­வில் விஷ்ணு ஆல­யங்­க­ளில் நடை­பெ­றும். மேலும் அம்­பாள் ஆல­யங்­க­ளி­லும் கடைப்பிடிக்கப்படும். ஆல­யங்­க­ளில் திரு­வி­ளக்­குப் பூஜை­யு­டன் விரத்­தினை உரிய நிய­திப்­படி அனுஷ்­டிக்­க­லாம். எனி­னும் ஆல­யங்­க­ளுக்குச் சென்று விர­தத்தை அனுஷ்­டிக்க முடி­யா­த­வர்­கள் தம் வீடு­க­ளில் உரிய முறைப்­படி இவ் விர­தத்தை கடைப்­பி­டிக்க முடி­யும்.

அதா­வது இந் நாளில் வீட்­டினை தூய்­மைப் படுத்தி வீட்டு வாச­லில் கோலம் ஈட்டு சுவாமி அறை­யில் கும்­பம் வைத்­து,பூக்­கள், பூமா­லை­கள் சாற்றி நைவேத்­தி­யங்­களை படை­யல் செய்­து, திரு­ வி­ளக்கு ஏற்றி குங்­கும அர்ச்­சனை செய்­வ­து­டன், மகா­லட்­சுமி அஷ் டோத்­தி­ரம், மகா­லட்­சுமி பாடல்­களை உச்­ச­ரித்து நோன்­புக் காப்பைக் கையில் அணிந்து விரத்தை நிறைவு செய்­ய­லாம்.

வர­லட்­சுமி தேவி­யின் திரு­வ­ருள்

ஆகவே இத்­த­கைய சிறப்­புக்­கள் பல­வற்றை கொண்டு விளங்­கு­கின்ற இந்த வர­லட்­சுமி விரதத்தை திரு­ம­ண­மான பெண்­கள், கன்­னிப் பெண்­கள் மற்­றும் விர­தம் கடைப்பிடிக்க விரும்­பு­கின்­ற­வர்­கள் என அனை­வ­ரும் உரிய முறைப்­படி கடைப்­பி­டித்து பாற்­க­டல் அவ­த­ரித்து விஷ்­ணு­வின் இத­யக்­க­ம­லத்­தில் வீற்­றி­ ருக்­கின்ற ஸ்ரீ தேவி­யாம் மகா­லட்­சு­மி­யின் திரு­வ­ருள் துணை பெற்று சகல நலன்­க­ளை­யும் பெற்று இந்த வைய­கத்­தில் இன்­புற்று வாழ்­வோ­மாக.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv