Friday , November 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பிணைமுறி மோசடி: பிரதமரிடம் விசாரணை நடத்த வலியுறுத்தும் வாசுதேவ

பிணைமுறி மோசடி: பிரதமரிடம் விசாரணை நடத்த வலியுறுத்தும் வாசுதேவ

பிணைமுறி மோசடி: பிரதமரிடம் விசாரணை நடத்த வலியுறுத்தும் வாசுதேவ

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இதுவரை எட்டு நாம் முறைபாடுகளை பதிவு செய்துள்ளோம். அதில் முதலாவது முறைபாடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவே முன்வைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதமருக்கும் தொடர்புல்லது. அவருக்கு எதிராக உடனடியாக ஊழல் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரகாரம் ஆணைக்குழுவில் எவரேனும் போலியான முறைப்பாடுகள் பதிவுசெய்வாராக இருப்பின் அவர்களுக்கு எதிராக முறையிட்டு விசாரணைகளை நடத்தலாம்.

அவ்வாறாயின் எமக்கு எதிராக முறைபாடு பதிவு செய்யுங்கள். இல்லையேல், பிரதமருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடத்துங்கள்’ என்றார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …