Home / செய்திகள் / உலக செய்திகள் / இரட்டை குயுரிமை பெற்ற கனடியர்களுக்கு அமெரிக்கா அளித்த உத்தரவாதம் ?

இரட்டை குயுரிமை பெற்ற கனடியர்களுக்கு அமெரிக்கா அளித்த உத்தரவாதம் ?

இரட்டை குயுரிமை பெற்ற கனடியர்களுக்கு அமெரிக்கா அளித்த உத்தரவாதம் ?

கனடிய கடவு சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் அமெரிக்க பயணதடைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என ட்ரூடோ அரசாங்கம் உத்தரவாதத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிககாவிற்குள் நுழைவதற்கு ஏழு நாடுகளின் குடிமக்களிற்கு தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை பெற்ற கனடியர்கள் கனடிய அமெரிக்க எல்லையில் வைத்து திருப்பி அனுப்பபட மாட்டார்கள் என்ற அமெரிக்கா வழங்கியுள்ள இந்த உத்தரவாதத்தை பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ சனிக்கிழமை பின்னிரவு வெளியிட்ட மின்னஞ்சல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய கடவுசீட்டுக்களுடன் பயணிக்கும் கனடிய பிரசைகள் வழக்கமான செயற்பாடுகள் கையாளப்படுமென குறிப்பிட்ட மின்னஞ்சல் தெரிவிக்கின்றதென கூறப்பட்டுள்ளது.

ஈரான், ஈராக், சுடான், சோமாலியா, சிரியா, யெமன் மற்றும் லிபியா நாட்டை சேர்ந்த கனடியர்கள் மற்றும் இந்நாடுகளை சேர்ந்த குடியுரிமையாளர்கள் அடுத்த மூன்று மாதங்களிற்கு அமெரிகாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததென யு.எஸ்.மாநில துறை அறிவித்திருந்தது.

ஆனால் ட்ரூடோவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டானியல் ஜின் மற்றும் மற்றய அதிகாரிகள் தங்கள் அமெரிக்க சகாக்களை-டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் விளின் உட்பட-தொடர்பு கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விளின் கனடிய கடவுசீட்டுக்கள்-இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் உட்பட- குறிப்பிட்ட தடையால் பாதிக்கப்பட மாட்டார்கள் என உறுதிப்படுத்தியுள்ளார்.

யு.எஸ்சிற்குள் நுழைய முடியாதவர்களை கனடா வரவேற்கும் என ட்ரூடோ சனிக்கிழமை ருவிட்டில் தெரிவித்திருப்பதாக அறியப்படுகின்றது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …