ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசில் அடுத்த இரண்டுவாரங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கவின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
மூன்று பிரதாக அறிக்கைகள் மற்றும் முழு நாட்டிலும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள யோசனைகளுக்கு அமையாக இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய ஐ.தே.கவின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தில் அரசு துரிதமாக மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்திட்டங்கள் குறித்த அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.
இதேவேளைஇ பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஐ.தே.கவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முழுமையான மறுசீரமைப்புகளை ஆராயந்து தமது அறிக்கையை அடுத்தவாரம் பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன் தேசிய அரசின் பின்வரிமை எம்.பிகள் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ள காரணிகளை கண்டிறிந்து தெரிவியப்படுத்தும் வகையில்இ இராஜங்க அமைச்சர் அலவத்துவல தலைமையிலும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் அறிக்கையும் அடுத்தவாரம் பிரதமரிடம் கையளிக்க வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு பிரதி அமைச்சரகளான அமீர் அலி, கருணாரத்ன பரணவித்தான மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்கி ஜயவர்தன, ஆனந்த குமாரசிறி, பந்துலால் பண்டாரகொட, அர்ஷன் ராஜகருணா, ஜயரத்னஇ எக்டர் அப்புவாமி, திலகராஜ் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.