Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ். பல்கலை வவுனியா வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

யாழ். பல்கலை வவுனியா வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் த.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை காலை 8 மணிக்கு முன்னர் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் தொடர்பிலான விசாரணைகள் நாளை ஆரம்பிக்கப்படும் என யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் த.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …