ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான விசேட பிரதிநிதி பென் அமர்சன் வவுனியாவில் நீதிபதிகளை நாளை (புதன்கிழமை) சந்திக்கவுள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர் பிரதம நீதியரசரின் பணிப்புரைக்கமைய நாளை (புதன்கிழமை) வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் மற்றும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட நீதிபதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
இக் கலந்துரையாடல் வவுனியா மேல்நீதிமன்ற கேட்போர் கூடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், இச்சந்திப்பின் போது தற்கால நீதிமன்ற சூழ்நிலைகள் மற்றும் சட்டம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.