Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐ.நா. செயற்­குழு இலங்கை வரு­கி­றது.!

தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐ.நா. செயற்­குழு இலங்கை வரு­கி­றது.!

தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­கு­ழுவின் மூவர் கொண்ட உறுப்­பி­னர்கள் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திக­தி­வரை இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர்.

நாட்டின் மனித உரிமை நிலைமை குறித்து ஆராய்ந்து மதிப்­பிடும் நோக்­கி­லேயே இந்த செயற்­கு­ழுவின் விஜயம் அமை­ய­வுள்­ளது.

ஜோஸ் அன்­டோ­னியோ லீ டூமி மற்றும் எலினா ஸ்டீனிர்ட் ஆகிய மூவரே இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். ஐக­கிய நாடு­களின் இந்த விசேட நிபு­ணர்கள் பொலிஸ் நிலை­யங்கள் சிறைச்­சா­லைகள் புனர்­வாழ்வு நிலை­யங்கள் உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்து நிலை­மை­களை பார்­வை­யி­ட­வுள்­ளனர்.

மேல் மாகாண வட மத்­திய மாகாணம் வடக்கு கிழக்கு தெற்கு மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளுக்கும் ஐக்­கிய நாடு­களின் விசேட செய­லணி விஜயம் செய்து நிலை­மை­களை பார்­வை­யி­ட­வுள்­ளது. அரச அதி­கா­ரிகள் சிவில் சமூக பிர­தி­நி­திகள் ஆகி­யோ­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்­ளனர்.

தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­கு­ழுவின் இலங்கை விஜயம் குறித்த மதிப்­பீட்டு அறிக்­கை­யா­னது ஐக்­கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …