வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணி கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தேசிய அரசிலுள்ள உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் எதிர்வரும் 2ஆம் திகதி ஆஜராகி வெளிவிவகார அமைச்சர் வாக்குமூலமளிக்கவுள்ளார்.
அதன்போது அவர் வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே அடுத்தகட்ட நகர்வு அரசியல் களத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக, தேசிய அரசுக்குப் பெரும் நெருக்கடியை களங்கத்தை ஏற்படுத்திய விடயமான பிணைமுறி விவகாரம் பார்க்கப்படுகின்றது. எனவே, இந்த மோசடியுடன் தொடர்புபட்டிருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐ.தே.கவிலுள்ள பின்வரிசை எம்.பிக்கள் சிலரும் ஆலோசனை நடத்திவருகின்றனர்.
பிணைமுறி மோசடி இடம்பெற்ற காலப்பகுதியில் நிதி அமைச்சராக தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவே செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலோசியஸின் நிறுவனத்தால் இவருக்கு சொகுசு வீடொன்று வழங்கப்பட்டுள்ளது என ஆணைக்குழு விசாரணைகளில் அண்மையில் தெரியவந்தது.