Monday , December 23 2024
Home / முக்கிய செய்திகள் / பாலஸ்தீனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

பாலஸ்தீனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் என்று அங்கீகரித்து, அதற்கான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டனில் வெளியிட்டார்.

இது பல்லாண்டு கால அமெரிக்காவின் கொள்கைக்கு மாறான அறிவிப்பாக அமைந்துள்ளது. ஜெருசலேம் நகரின் நிலைப்பாடு குறித்து இஸ்ரேலும், பாலஸ்தீனமும் கடைசியாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இதுவரை இருந்த நிலைப்பாடு ஆகும்.இந்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப், உடனடியாக டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உலக அளவில் எதிர்ப்பை பெற்றுள்ள இந்த அறிவிப்பு பாலஸ்தீன மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கரை மற்றும் காஸா முனை பகுதியில் நேற்று கலவரம் வெடித்தது. பாலஸ்தீனியர்கள் போராட்டத்தை இஸ்ரேல் ராணுவம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளை கொண்டும் ஒடுக்கியது. இந்த தாக்குதலில் 32 பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. பாலஸ்தீனின் முக்கிய அரசியல் இயக்கமாக இருக்கும் ஹமாஸ், காலவரையற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக மேற்கு கரை மற்றும் காஸா எல்லைகளில் இஸ்ரேல் ராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இம்மாத இறுதியில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் பாலஸ்தீன் பிரதமர் மஹ்மூத் அப்பாஸ் சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் அமெரிக்க தலைவர்களை வரவேற்க தயாராக இல்லை என பாலஸ்தீன் அரசு கூறியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை, பேச்சுவார்த்தையை ரத்து செய்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு சவுதி அரேபியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv