வவுனியா, புளியங்குளம், பூதூர் செல்லும் வீதியிலுள்ள ரயில் கடவையில் இன்று பிற்பகல் உழவு இயந்திரத்துடன் ரயில் மோதியதில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற ரயில், பூதூர் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடந்த உழவு இயந்திரத்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியான பூதூரைச் சேர்ந்த ஜெகநாதன் ரவீதரன் (வயது – 20), உதவியாளரான புளியங்குளத்தைச் சேர்ந்த ரவீந்திரன் கீர்த்தீபன் (வயது – 21) ஆகிய இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.