கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஜே.வி.பிக்கு ஆதரவு
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை விளக்கம் எதிர்வரும் 26ம் திகதி வெளியிட்டு வைக்கப்படும்.
பத்தரமுல்ல வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் வெளியீட்டு நிகழ்வு நடக்கும். ஜேவிபியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
சிறுபான்மையினரின் ஆதரவை பெற முயற்சிப்பதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது வேட்பாளர் அநுரகுமாரவுடன் உத்தியோகப்பற்றற்ற முறையில் பேசியதாகவும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் தமது ஆதரவை எமக்கு தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.




