தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம்
தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என பகிரங்கமாக மேடையில் தெரிவித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச.
நேற்று யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பொக்கணையில் நேற்று வீட்டுத் திட்டம் திறந்து வைத்த பின்னர், பயனாளிகளிற்கு உதவிப்பொருட்கள் வழங்கினார். இதன்போதே மேற்படி கருத்தை தெரிவித்தார்.
அமைச்சர் சஜித் உதவிப்பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, விஜயகலா மகேஸ்வரன் அவருக்கு அருகில் சென்று, ஏதோ பேசினார்.
அப்போது, ஊடகவியலாளர்கள் அவர்களை புகைப்படமெடுக்க முண்டியடித்தனர். இதை அவதானித்த சஜித், அவசரப்படாமல் ஆறுதலாக புகைப்படம் எடுக்கும்படியும்,
இதை கேட்டு, விஜகலா வெட்கத்தில் நெளிந்தார்.
பின்னர், கிளிநொச்சியில் நடக்கும் நிகழ்விற்கு வருவீர்கள்தானே என சஜித், விஜயகலாவிடம் வினவினார். விஜயகலா ஓம் என்றார்.
அப்போது உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. கூட்டமைப்பின் எம்.பிக்களையும் வழங்க வைக்கும் நோக்கத்துடன், சுற்றும்முற்றும் பார்த்த சஜித், “கூட்டமைப்பினர் யாராவது நிற்கிறார்களா?“ என்றார்.
அதற்கு முன்பாகவே த.சித்தார்த்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புறப்பட்டு சென்று விட்டனர். அவர்கள் போய்விட்டனர் என விஜயகலா கூறினார்.
“கூட்டமைப்பினர் இங்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஐக்கிய தேசியக்கட்சியும், கூட்டமைப்பும் ஒன்றுதான். வேறுவேறு அல்ல“ என்றார்.