வடமராட்சிப் பகுதியின் இருவேறு இடங்களில் வைத்து மூவர் கசிப்புடன் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர்.
துன்னாலையில் வைத்து 38,48 வயதுடைய இருவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களின் உடமையிலிருந்து ஒன்றரை லீற்றர் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இதே வேளை நெல்லியடி நகர்ப்பகுதியில் வைத்து 600 மில்லிலீற்றர் கசிப்புடன் இன்னுமொருவர் கைது செய்யப்பட்டார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.