தொண்டமானின் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.கா.வின் உப தலைவர் செந்தில் தொண்டமான் இன்று தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக செந்தில் தொண்டமான் கூறினார்.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.