Sunday , October 19 2025
Home / சினிமா செய்திகள் / நீங்கள் பார்க்காத ஓவியாவின் இன்னொரு முகம் இது தான்…

நீங்கள் பார்க்காத ஓவியாவின் இன்னொரு முகம் இது தான்…

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 வது நாள் முடிந்தும் கூட இன்னும் ஓவியா புகழ் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. நாளுக்கு நாள் யாரவது ஓவியாவை புகழ்ந்து கொண்டே தான் இருகிறார்கள்.

ஆனால் பிக் பாஸில் பங்கேற்ற ஒரு சிலரோ அவரை தவறாக பேசுகிறார்கள். அப்படி பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுயா ஓவியாவை பற்றி என்ன சொல்லுகிறார் தெரியுமா?..

இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி அனைவராலும் பேசப்பட்டு பிரபலமானது, கமலின் முகபாவனை, பேச்சு என பார்வையாளர்களுக்கு புதுவிதமாக இருந்தது. ஓவியாவிற்காக பலரும் நிகழ்ச்சியை தவறாது பார்த்து வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலில் வெளியேறிய நபர் அனுயா, இவர் தற்போது ஒரு பேட்டியில் தன்னுடைய பிக் பாஸ் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது பிக் பாஸ் தன்னை தனக்கே யாரென காட்டும் நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சியில் நான் யாரிடமும் சண்டை போடவில்லை, வெறுக்கவும் இல்லை. ஆனாலும் என்னுடைய தோழி ஓவியா தான் என்றார்.

இரவில் விளக்குகள் அணைந்த பிறகு நான் தனியாக பாடி கொண்டிருப்பேன். என்னுடைய இந்த நடவடிக்கைகள் ஓவியாவுக்கு ரொம்பவே பிடிக்கும்.

அதன் பிறகு ஓவியா என்னை இரவில் பாட சொல்லி கேட்டுக் கொண்டே இருப்பார். இதெல்லாம் பிக் பாஸில் ஒளிபரப்பாகவில்லை என கூறியுள்ளார்.

Loading…

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …