வட மாகாணத்தின் அரச பேருந்து பணியாளர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
வட பிராந்திய பேருந்து சாலை பிரதான அதிகாரிகள் இரண்டுபேரை இடமாற்றம் செய்யக் கோரியே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இது தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில் இன்றும் இந்த போராட்டம் தொடர்வதாக, வவுனியா பேருந்து சாலையின் நேரக் கட்டுப்பாட்டாளர் ஜெசிகரன் தெரிவித்துள்ளார்.