Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வெளிநாட்டில் இருந்து வந்து யாழ் சென்றவர்களிடம் பெரும் திருட்டு!

வெளிநாட்டில் இருந்து வந்து யாழ் சென்றவர்களிடம் பெரும் திருட்டு!

வெளிநாட்டில் இருந்து வந்து யாழ் சென்றவர்களிடம் பெரும் திருட்டு!

வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி, சாமியன் அரசடிப் பகுதியில் இன்று முற்பகல் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தமது உறவினரின் வீட்டில் தங்கியுள்ளனர். வீட்டிலுள்ள அனைவரும் இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆலயத்துக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் பிற்பகல் 1.30 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் உள்ள பொருள்கள் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன.

வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த 20 பவுண் தங்க நகைகள், 400 ஸ்ரேலிங் பவுண்ட் நாணயத் தாள்கள், ஆயிரத்து 300 யூரோ நாணயத்தாள்கள் என்பன திருட்டுப் போயுள்ளன.

சம்பவம் தொடர்பில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv