Monday , November 18 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

அமெரிக்காவுக்குள் வெளிநாட்டு முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 7 முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் விதித்துள்ள ‘விசா’ தடை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

‘7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை விதித்து இருப்பது தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றும் சிறந்த வழியாக கருத முடியாது. அது கோபத்தையும், கவலையையும் அதிகரிக்க செய்யும்.

எனவே, அதற்கான தடையை நீக்க வேண்டும். அது எனது கருத்து. மேலும் டிரம்பின் இத்தகைய நடவடிக்கை சரியான வழியில்லை. இது விரைவில் நீக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட 7 நாடுகளை சேர்ந்த மக்கள் மற்றும் அகதிகள் நுழையாமல் தடுப்பதன் மூலம் மட்டும் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க முடியாது. ஏனெனில் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்த விரும்பும் தீவிரவாதிகள் பாஸ்போர்ட் மூலம் நபர்களை அனுப்ப மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …