யாழில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைய ஆறு போ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனா்.
குறித்த வாள்வெட்டு குழுவினர் யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கு தயாரகி இருப்பதாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை வட்டுகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் ஒரு தலைக் காதல் விவகாரம் காரணமாகவே வாள்வெட்டுச் சம்பவங்களில் தொடர்சியாக ஈடுபட்டு வந்துள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று மாலை மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபர்கள் ஆறு பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.