Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / காணாமல்போனார் அலுவலகம் விரைவில் உருவாக்கப்படும்! – ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்கிறார் சுமந்திரன்

காணாமல்போனார் அலுவலகம் விரைவில் உருவாக்கப்படும்! – ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்கிறார் சுமந்திரன்

காணாமல்போனார் அலுவலகம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

காணாமல்போனோரைக் கண்டுபிடித்து தருமாறு கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் மற்றும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே காணாமல்போனோரின் உறவுகள் மேற்கொண்டுள்ள போராட்டம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அதேவேளை, வடக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பில் இன்று புதன்கிழமை முதல் மாவட்ட செயலகங்களில் கூட்டங்கள் நடைபெறவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …