கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தாவரவியல் பூங்கா என்ற பெயர்ப்பலகை இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கரைச்சிப் பிரதேச சபையினால் கடந்த திங்கட்கிழமை இந்தப் பெயர்ப் பலகை போடப்பட்டது. இந்த நிலையில், அன்றையதினம் இரவே சேதமாக்கப்பட்டு, பிடுங்கி எறியப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட த்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தாவரவியல் பூங்கா எனும் பெயர்ப் பலகை குறித்த சபையால் நடப்பட்டது.
குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனினால் 10 லட்சம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பி டத்தக்கது.