தமிழ் மக்களின் அழிவுக்கு தமிழீழ விடுதவைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காரணம் அல்லவென்றும் அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில், பிரபாகரன் நல்லதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவர் என தெரிவித்துள்ளார்.
அவரின் கீழ் உள்ளவர்கள் செய்த அத்தனை தவறுகளையும் தானே ஏற்றுக்கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த தலைமைத்துவ பண்புகளைக்கொண்ட பிரபாகரன், தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமானவர் அல்ல. அன்றிருந்த அரசியல் தலைவர்களே காரணமானவர்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.