Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை:30 குழந்தைகள் பலி

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை:30 குழந்தைகள் பலி

உ.பி.மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் உயிரிழந்தன.

உ.பி.மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களில் சுமார் 30 குழந்தைகள் உயிரிழந்தன.

இது குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்கி குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து கோராக்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் கூறியதாவது: ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் நிலுவை தொகை வழங்கவில்லை பணபாக்கி காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார்.

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …