Friday , November 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொழும்பில் 50,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கம்

கொழும்பில் 50,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கம்

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடிசையில் வாழும் குடும்பங்களை அகற்றி, வேறிடத்தில் குடியமர்த்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவர்கள் அகற்றப்படுவதன் மூலம் 400 ஏக்கர் காணியை பெற்று, வர்த்தக மற்றும் பொது தேவைகளிற்கு பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாலிகாவத்த புகையிரத திணைக்கள காணி, கெட்டராமா அப்பிள்வாட், ப்ளூமண்டல் மற்றும் இரத்மலானை நீர்ப்பாசனத் திணைக்கள காணிகளில் குடியிருக்கும் குடும்பங்களே இந்த திட்டத்தின் கீழ் அகற்றப்படவுள்ளனர்.

குடும்பங்களை அகற்ற 170 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அகற்றப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு வழங்கப்படும்.

பெருநகர, மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv