Sunday , February 2 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சிறுமி கடத்­தப்­பட்டு கூட்டு வன்­பு­ணர்வு- வவு­னி­யா­வில் கொடூ­ரம்

சிறுமி கடத்­தப்­பட்டு கூட்டு வன்­பு­ணர்வு- வவு­னி­யா­வில் கொடூ­ரம்

முச்­சக்­க­ர­வண்­டி­யில் வந்­த­வர்­க­ளால் கடத்­திச் செல்­லப்­பட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 16 வய­துச் சிறுமி ஒரு­வர் தவ­றான முடி­வெ­டுத்­துத் தற்­கொ­லைக்கு முயன்ற நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்
பட்­டார்.

இது தொடர்­பில் நால்­வர் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸா­ரால் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­தக் கூட்டு வன்­பு­ணர்வு வவு­னியா மாவட்­டத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. வன்­பு­ணர்­வின் பின்­னர் சிறு­மியை குகன் நக­ரில் உள்ள ஆள்­க­ளற்ற வீடு ஒன்­றில் குற்­ற­வா­ளி­கள் அநா­த­ர­வாக விட்­டுச் சென்­ற­னர்.

ஒரு­வாறு நேற்று வீடு வந்து சேர்ந்த சிறுமி உற­வி­னர்­க­ளி­டம் தெரி­வித்தை அடுத்து அவர்­கள் பொலி­ஸா­ரி­டம் முறை­யிட்­ட­னர்.

சிறு­மி­யின் தக­வல்­படி முத­லில் இரு­வ­ரைக் கைது செய்த பொலி­ஸார் அவர்­க­ளி­டம் விசா­ரணை செய்­த­னர். அவர்­கள் கொடுத்த தக­வ­லின்­படி மேலும் இரு­வர் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அந்த இரு­வ­ரும் கொடுத்த தக­வ­லின்­படி மேலும் ஒரு­வர் தேடப்­பட்டு வரு­கின்­றார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

வைத்­தி­ய­சா­லைக்­குச் சென்­று­விட்டு வீடு திரும்­பிக் கொண்­டி­ருந்த மாணவி தனது விட்­டுக்கு அரு­கில் உள்ள முதன்­மைச் சாலை­யில் பஸ்­ஸை­விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்­டி­ருந்த சம­யம் முச்­சக்­க­ர­வண்­டி­யில் வந்­த­வர்­க­ளால் கடத்­தப்­பட்­டார் என்று பொலிஸ் விசா­ர­ணை­யில் தெரி­ய­ வந்­தி­ருக்­கி­றது.

மதிய நேரம் மாணவி தனித்­துச் சென்­ற­தைப் பயன்­ப­டுத்தி அவ­ரைக் கடத்­தி­யுள்­ள­னர் என்று கூறப்­பட்­டது.

சம்­ப­வம் தொடர்­பில் அறிந்த உற­வி­னர்­கள் நேற்று வவு­னியா பொலி­ஸில் முறை­யிட்­ட­னர். அவர்­கள் பொலி­ஸில் முறை­யி­டச் சென்­றி­ருந்த நேரத்­தில் பாதிக்­கப்­பட்ட சிறுமி தவ­றான முடி­வெ­டுத்து உயிரை மாய்க்க முயன்­றி­ருக்­கி­றார்.

இதை அடுத்து உற­வி­னர்­க­ளால் அவர் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். அவர் தற்­போது ஆபத்­தான கட்­டத்­தைத் தாண்­டி­யி­ருக்­கி­றார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பொலி­ஸார் தொடர்ந்து விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­ற­னர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …