பூசைக்காக கோவில் மண்டபத்தைக் கழுவிய பூசகர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவம் கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டியில் நேற்று இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த ப.திருலோகநாதன் (வயது – 61) என்பவரே உயிரிழந்தார்.
நெஞ்சுவலி என்றுகூறியபடி மயங்கி வீழ்ந்துள்ளார். வாகனம் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவர் அதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டமை தெரியவந்தது. சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்ட்டது.