முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நம்பிக்கையுடன் இவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்துள்ளார்.
நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.