ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்தபடியாக நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டம் அநேகமாக மீளாய்வு செய்யப்பட்ட அமைச்சரவையாக இருக்கலாம் என அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளளன.
அமைச்சரவைக் கூட்டமொன்று நடந்து முடிந்ததும் அடுத்த கூட்டத்துக்கான திகதியும் நேரமும் அறிவிக்கப்படுவது சம்பிரதாயமாகும். எனினும், இறுதியாக நடந்த கூட்டத்தில் அடுத்த கூட்டத்துக்கான திகதியும் நேரமும் அறிவிக்கப்படாததால் அடுத்த கூட்டம் அநேகமாக மாற்றம் செய்யப்பட்ட அமைச்சரவையின் கூட்டமாக இருக்கலாம் என அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் 8ஆவது ஷரத்தின்கீழ் பிரதமரின் தலையீடு இல்லாமலே ஜனாதிபதிக்கு அமைச்சரவையை மாற்றுவதற்கான அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி வெகுவிரைவில் அமைச்சரவையில் மாற்றமொன்றைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.