Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஆட்சிக் கவிழ்ப்பே தீர்வு! – மஹிந்த கூறுகின்றார் 

ஆட்சிக் கவிழ்ப்பே தீர்வு! – மஹிந்த கூறுகின்றார் 

“நாட்டின் தற்போதைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நானே கடும் அதிருப்தியில் உள்ளேன்.”
 – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“நாட்டை மீட்ட பாதுகாப்புத் தரப்பினர் இப்போது கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்படுகின்றனர். அரசுக்கு என்ன செய்வதென்று தெரியாதுள்ளது. இதனால்தான் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது.தற்போதைய அரசின் இராணுவ வேட்டையை நிறுத்துவதற்கு ஆட்சிமாற்றம்தான் ஒரே வழி.
நாட்டின் தற்போதைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நானே கடும் அதிருப்தியில் உள்ளேன். நான் நாட்டை ஆட்சிசெய்தபோது போர் இருந்தது. இப்போது அப்படியில்லை. ஆனாலும், இந்த அரசு பழிவாங்கும் அரசாகவே உள்ளது” – என்று தெரிவித்துள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …