Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / குழப்பமான காலநிலை தொடரும்

குழப்பமான காலநிலை தொடரும்

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் மழையுடன் கடும் காற்று வீசக்கூடும் எனவும் குறித்த சந்தர்ப்பத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் , கிழக்கு , ஊவா , வடக்கு , வடமத்திய , தென் ,மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …