மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனத்தால் மோதுண்டு இளம் கன்று உட்பட மூன்று மாடுகள் பலியாகியுள்ளன.
ஆரையம்பதி பிரதேச சபைக்கும், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலைக்கும் முன்பாக உள்ள பிரதான வீதியில் இக்கோகோர விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ஏற்கனவே பல செய்திகள் வாயிலாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தும் அதிகாரிகளினதும் கால்நடைகளின் உரிமையார்களினதும் அசமந்த போக்கே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றி வரும் கால் நடைகள் இவ்வாறு உயிர் இழப்பதற்கு காரணமாக அமைகின்றது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.